Breaking News: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி உட்பட இருவர் கொல்லப்பட்டனர்
Army News Today in Tamil - ஜம்மு காஷ்மீரில் குப்வாரா பகுதியில் நடந்த என்கவுண்டரில் பாகிஸ்தான் தீவிரவாதி உட்பட இருவர் கொல்லப்பட்டனர்;
Army News Today in Tamil - செவ்வாயன்று ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உட்பட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா (LeT) தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
குப்வாராவின் சக்தராஸ் கண்டி பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் விஜய் குமார் கூறுகையில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறியுள்ளார்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2