கண்ணிவெடி தாக்குதல் மூலம் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி

இந்தியாவில் மிகப்பெரிய கண்ணிவெடி தாக்குதலை நடத்துவதற்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு உள்ளதாக தகவல்

Update: 2021-08-14 06:30 GMT

மாதிரி படம்

நாடுமுழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பு இந்தியாவில் மிகப்பெரிய கண்ணிவெடி தாக்குதலை நடத்துவதற்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு உள்ளது. இதற்காக பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் பயிற்சி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு அதிநவீன கண்ணி வெடிகளை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்குள் அனுப்பி இருப்பதை உளவுத்துறை கண்டுப்பிடித்து உள்ளது. அந்த கண்ணிவெடிகள் ஒவ்வொன்றும் சுமார் 3 கிலோ எடை கொண்டவை.

இந்த கண்ணி வெடி தாக்குதலை குறிப்பிட்ட இடங்களில் நடத்துவதற்கு 6 நக்சலைட் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. முகமது சித்திக் என்ற பயங்கரவாதி தலைமையில் அந்த பயங்கரவாதிகள் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு இருக்கிறார்கள். அதுபோல ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதை உளவுத்துறையினர் கண்டறிந்து உள்ளனர். இந்த பயங்கரவாதிகள் மூலம் இந்தியாவில் நாச வேலைக்கு முயற்சிகள் நடப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே முக்கிய நகரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உளவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News