வாழைப்பழத்தை தராமல் ஏமாற்றிய பாகன்.. தும்பிக்கையால் துவம்சம் செய்த யானை
elephant in tamil - யாசகம் பெற்ற வாழைப்பழத்தை கொடுக்காமல் ஏமாற்றிய பாகனை யானை மிதித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
elephant in tamil - மத்திய பிரதேச மாநிலத்தின், செயோனி மாவட்த்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது ரஹிவாடா கிராமம். இந்த கிராமத்த்தில் வசித்து வருபவர் பரத் வாசுதேவ். இவர் ஹீரா என்ற பெண் யானையை வைத்து அப்பகுதியில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்திவந்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கம் போல், யாசகம் பெற்றுவிட்டு ஊர் திரும்பும்போது, வாழைப்பழங்களை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர், யானைக்க வாழைப்பழங்களை கொடுக்குமாறு சில சீப்பு பழங்களை கொடுத்துள்ளார்.
ஆனால் பாகன் பரத், அதை யானைக்குக் கொடுக்காமல் தனது பைக்குள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பொறுத்துப்பார்த்த அந்த பெண் யானை, பாகன் வாழைப்பழங்களை தராமல் ஏமாற்றி வந்ததையடுத்து கோபடைந்து தனது தும்பிக்கையால் தூக்கி சாலையிலேயே துவம்சம் செய்து, காலால் மிதித்து கொன்றது.
இதுகுறித்து பரத்துடன் சென்ற உதவியாளர் ஒருவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இதுபோல் யானை இதற்கு முன்பு நடந்து கொண்டதேயில்லை என்றும் உடனிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.