இந்தியாவில் நெல் கொள்முதல் 21 சதவீதம் அதிகரிப்பு

Update: 2020-12-22 05:50 GMT

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் சுமுகமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்தியஅரசு வெளியிட்ட செய்திகுறிப்பில்,காரீப் 2020-21 பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பிகார் மற்றும் ஜார்க்கண்டில் கடந்த 20-ஆம் தேதி வரை, 415.37 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டு, இதே காலத்தின் கொள்முதலைவிட (341.68 லட்சம் மெட்ரிக் டன்) 21.56 சதவீதம் அதிகமாகும். இந்த கொள்முதல் மூலம் 48.96 லட்சம் விவசாயிகள், ரூ.78423.17 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுள்ளனர்.

தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா மற்றும் ராஜஸ்தானிலிருந்து கடந்த 20-ஆம் தேதி வரை 204529.20 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து, நிலக் கடலை மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம் 112077 விவசாயிகள், ரூ. 1096.13 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுள்ளனர்.இதே போல் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து கடந்த 20-ஆம் தேதி வரை 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய், 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூபாய் 52.40 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைத்துள்ளது.

Tags:    

Similar News