Rajasthan School Bus Accident பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் 30 குழந்தைகள் காயம், ஒருவர் உயிரிழப்பு

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் சுமார் 30 பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

Update: 2023-07-12 12:54 GMT

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் புதன்கிழமையன்று பள்ளியிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.

பேருந்து மாணவர்களை அவர்களது பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது, ​​பொக்ரான் நகருக்கு அருகே விபத்து ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

"டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்தது" என்று சங்கரா காவல் நிலையத்தின் (ஜெய்சால்மர்) உதவி காவல் ஆய்வாளர் கைலாஷ் சந்த் கூறினார்.

காயமடைந்த மாணவர்களில் பலர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், சிலர் உள்ளூர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். வேறு சில குழந்தைகளின் பெற்றோர் அவர்களை தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றதாக திரு சந்த் மேலும் கூறினார்.

மாணவர்கள் 10-15 வயதுக்குட்பட்டவர்கள் என்று ஏஎஸ்ஐ கூறினார். இந்த விபத்தில் பெருத்து ஓட்டுநரும்  காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா கூறுகையில் , ஜெய்சால்மரில் இருந்து 11 பள்ளிக்குழந்தைகள் ஜோத்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் ஆபத்தில்லை எனக் கூறப்பட்டதாகவும், ஆனால் விக்ரம் சிங் என்ற  ஊழியர் ஒருவர் காயம் அடைந்து உயிரிழந்தார் என தெரிவித்தார்

இதேபோன்று நேற்று டெல்லி-மீரட் நெடுஞ்சாலையில் பள்ளி பேருந்து ஒன்று பயணிகள் கார் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். தவறான திசையில் வந்த பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் யாரும் இல்லாத நிலையில், பள்ளிப் பேருந்து மீது மோதியதில் காரில் வந்த  8 பேர் இருந்தனர்.6 பேர் உயிரிழந்தனர்  மீரட்டில் இருந்து புறப்பட்ட எஸ்யூவி குருகிராம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சம்பவத்தையடுத்து பள்ளி பேருந்து ஓட்டுநர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News