நுபுர்சர்மா கருத்து விவகாரம்: ராஜஸ்தானில் வன்முறை வெடித்தது

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்தை கூறிய நுபுர்சர்மாவுக்கு ஆதரவு கிளம்பியதால் ராஜஸ்தானில் வன்முறை வெடித்தது. இதையடுத்து அமைதி காக்குமாறு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கோரினார்.

Update: 2022-06-28 14:23 GMT

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.

.நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பா.ஜனதா கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கருத்து கூறினார். இதற்கு ஆதரவாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கண்ணையா லால் என்பவர் எட்டு வயது மகன் பதிவு போட்டதாக கூறப்படுகிறத். இதனை பார்த்த சிலர், அவரது கடைக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி அவரின் தலையை துண்டித்துள்ளனர்.

இதனையடுத்து உதய்பூரில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தி உள்ளார். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து உதய்பூர் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்து அமைப்புகள் கடைகளை மூடி எதிர்ப்பை தெரிவித்துள்ளன. நிலைமை மோசமடைந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் தாராசந்த் மீனா, காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் சவுத்ரி ஆகியோர் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியை பார்வைவிட்டனர். இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்திற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News