நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்த நாளை என்டிபிசி கொண்டாடியது

கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல், வினாடி வினா போன்ற ஆன்லைன் போட்டிகள் கோவிட் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது.;

Update: 2022-01-24 14:21 GMT



இந்தியா 75 ஆண்டு சுதந்திரத்தை விடுதலையின் அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடி வருகிறது. இந்த வகையில், தேசிய அனல் மின் கழகத்தின் தாத்ரி நிலையத்தில் ஒரு வாரகால குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடியது.

என்டிபிசி நாடு முழுவதும் உள்ள தனது அனைத்து அலுவலகங்களிலும், நேதாஜி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியது. சில விளையாட்டு வளாகங்கள், பூங்காக்களுக்கு நேதாஜியின் பெயர் சூட்டப்பட்டது.

நேதாஜி பிறந்தநாளைக் கொண்டாடும் விதத்தில், கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல், வினாடி வினா போன்ற ஆன்லைன் போட்டிகள் கோவிட் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது. விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாசின் பங்களிப்பு என்ற தலைப்பில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.




Tags:    

Similar News