இந்தியாவில் குறைந்து வரும் தினசரி கோவிட் தொற்று

இந்தியாவில் கோவிட் பாதிப்பு இறங்குமுகத்தில் இருக்கும் அதே நேரத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

Update: 2022-01-25 05:43 GMT

கோப்புப்படம் 

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 3.06 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2.55 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றை விட 50,190 குறைவாகும். அதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் 2.67 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,55,874 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,97,99,202 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 2,67,753 பேர் குணமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,70,71,898 ஆனது. தற்போது 22,36,842 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா காரணமாக 614 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,90,462 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 162.92 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 62,29,956 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News