நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, பொருள் போக்குவரத்து ஆகியவற்றில் முதலீட்டு வாய்ப்புகள்

நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, பொருள் போக்குவரத்து ஆகியவற்றில் முதலீட்டு வாய்ப்புகள்” குறித்து மும்பையில் நாளை தேசிய கருத்தரங்கு.

Update: 2021-12-16 13:41 GMT

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி

மும்பையில் நாளை, 2021 டிசம்பர் 17 அன்று நடைபெறவுள்ள "நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, பொருள் போக்குவரத்து ஆகியவற்றில் முதலீட்டு வாய்ப்புகள்" குறித்த தேசிய கருத்தரங்கிற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமை தாங்குகிறார்.

இந்தியாவின் பொருள் போக்குவரத்து துறைக்கு முக்கியத்துவம் வழங்க மத்திய, மாநில அரசுத்துறைகள், அவற்றின் முகமைகள், தனியார் துறை ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்துவது இந்தக் கருத்தரங்கின் நோக்கமாகும். இது தொடர்பாக சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பாரத் மாலா பரியோஜனா, சொத்துக்களைப் பணமாக்குதல், வாகன அழிப்பு கொள்கை ஆகிய மூன்று மத்திய அரசின் மைய பொருள்களின் முதலீட்டு வாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளது. சொத்துக்களைப் பணமாக்குதல் குறித்த விவாதங்கள் மூலம் நிதியாண்டு 25-க்குள் ரூ.6 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை பணமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த கருத்தரங்கில் சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் அமைச்சகங்கள் திறன்மிக்க முதலீட்டாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

Tags:    

Similar News