இன்று மத்திய பட்ஜெட் 2022-23: நாடாளுமன்றத்தில் தாக்கல்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது நான்காவது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது நான்காவது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இது இரண்டாவது காகிதமில்லா பட்ஜெட் ஆகும். திங்களன்று, நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை வழங்கினார், இது ஜிடிபி வளர்ச்சியை 8 முதல் 8.5% ஆக இருக்கும் என்று கூறியது.
பட்ஜெட் நாளில் நாடாளுமன்ற செயல்பாடுகள்
மக்களவையில் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்வதோடு காலை 11 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்குகிறது. மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் முடிந்து ஒரு மணி நேரம் கழித்து, நிதியமைச்சர் ராஜ்யசபாவில் 2022-23 ஆம் ஆண்டிற்கான அரசின் மதிப்பிடப்பட்ட வரவுகள் மற்றும் செலவுகள் குறித்த அறிக்கையை (ஆங்கிலம் மற்றும் இந்தியில்) தாக்கல் செய்வார்,
நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம், 2003ன் பிரிவு 3 (1)ன் கீழ், நடுத்தர கால நிதிக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கை வியூக அறிக்கை மற்றும் மேக்ரோ-பொருளாதார கட்டமைப்பு அறிக்கை ஆகியவற்றின் நகலையும் (ஆங்கிலம் மற்றும் இந்தியில்) அமைச்சர் தாக்கல் செய்வார்.
தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சக அலுவலகமான நார்த் பிளாக் சென்றடைந்தார். இங்கு, அதிகாரிகள் கூட்டம் நடத்துவார். நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு முன்னர் நிதியமைச்சர் ஜனாதிபதியையும் சந்திக்க உள்ளார்.