பிஎஃப்ஐயின் தாக்குதலுக்கு பயிற்சி அளித்த கேரள வழக்கறிஞர் கைது

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு பயிற்சி அளித்தது தொடர்பாக கேரள உயர்நீதிமன்ற வழக்கறிஞரை என்ஐஏ கைது செய்துள்ளது

Update: 2022-12-30 12:37 GMT

கோப்புப்படம்

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் தொடர்புடைய 56 இடங்களில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெள்ளிக்கிழமை கைது செய்தது.

என்ஐஏ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வெளியீட்டில், கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் முகமது முபாரக், எர்ணாகுளம் மாவட்டம் எடவனக்காட்டைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்துள்ளார். பிஎஃப்ஐ-ன் தற்காப்புக் கலைகள் மற்றும் ஹிட் ஸ்குவாடில் உறுப்பினராகவும் பயிற்சியாளராகவும் உள்ளார். மற்ற சமூகங்களின் தலைவர்களை குறிவைக்கும் வகையில் குழு பயிற்சி மற்றும் கும்பல்களை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளது என்று அது கூறியது.

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு எதிராக நடந்து வரும் அடக்குமுறையை அடுத்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய முபாரக் கைது செய்யப்பட்டார். செப்டம்பரில் நடத்தப்பட்ட சோதனைகள் தொடர்பாக கேரளாவில் இருந்து கைது செய்யப்பட்ட 14 வது பிஎஃப்ஐ ஆர்வலர் ஆவார்.

கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். மேலும் விசாரணைக்காக அவரை காவலில் வைக்கக்கோரி விசாரணை நிறுவனம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்.

என்ஐஏ அறிக்கையின்படி, ஒரு பேட்மிண்டன் ராக்கெட் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடரிகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள், சோதனையின் போது முபாரக்கின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. அவர் கடந்த காலத்தில் பிஎஃப்ஐ தீவிர ஊழியராக இருந்தவர் மற்றும் சமீபத்தில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.

குறிவைக்கப்படும் பிற சமூகங்களின் தலைவர்களின் பட்டியலை பிஎஃப்ஐதயார் செய்துள்ளதாக என்ஐஏ முன்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்த மாத தொடக்கத்தில், மத்திய நிறுவனம் கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், தடை செய்யப்பட்ட அமைப்பிடம் "மற்ற சமூகங்களின் தலைவர்களின் விவரங்களை சேகரிக்கவும், இலக்குகளின் பட்டியலைத் தயாரிக்கவும் செய்தியாளர்களின் ரகசியப் பிரிவு உள்ளது" என்று கூறியது.

பிஎஃப்ஐ அமைப்புக்கு எதிராக நாடு தழுவிய சோதனைகளின் ஒரு பகுதியாக செப்டம்பர் கடைசி வாரத்தில் கேரளாவில் இருந்து கைது செய்யப்பட்ட 11 தலைவர்களின் நீதிமன்ற காவலை நீட்டிக்கக் கோரி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  பி.எஃப்.ஐ.க்கு எதிராக இந்த நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News