இந்த ஆண்டின் மிக நீண்ட நாளான கோடைக்கால சங்கராந்தி (Summer Solstice) இன்று (ஜூன் 21) நிகழ்கிறது.
வருடத்தில் எந்த நாளில் அதிகமான சூரிய ஒளி தெரிகிறதோ/ சூரியன் உதயம் விரைவாகவும் மற்றும் மறைவது தாமதமாகவும் நடக்கும். இந்த நாளில், அதிக நேரம் சூரிய வெளிச்சம் இருக்கும், இந்த நாளை நீண்ட பகல் நேர நாள் என்றும் அறிவியலின் படி சங்கராந்தி (Soltice) என்றும் அழைக்கின்றனர்.
இந்த புதிரான ஆர்வம் தூண்டும் நிகழ்வு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20/ ஜூன் 21/-ஜூன் 22 ல் ஏதாவது ஒரு நாளில் நிகழ்கிறது.