கொரோனா காலத்துல கூட உனக்கு ஈவு இரக்கம் இல்லையா? ஏறு முகத்தில் தங்கம் விலை -நடுத்தர பெண்கள் அதிர்ச்சி

Update: 2021-06-08 11:10 GMT

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது தொடர்ந்து ஏறு முகத்தில் உள்ளது. அதனால் நகை பிரியர்கள் சோகத்தில்ஆழ்த்தியுள்ளனர். சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்‍கு 144 ரூபாய் உயர்ந்து 37,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும் இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டி வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.4630-க்கு விற்பனையாகிறது. அதேபோல, நேற்று 36,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 144 ரூபாய் உயர்ந்து 37,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,989 ரூபாயாக உயர்ந்து, 8 கிராம் தூய தங்கம் 39,912 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை 20 பைசா உயர்ந்து ரூ.76.30-க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.76,300 ஆக உள்ளது.

மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,751 என்றும், பெங்களூருவில் ரூ.4,585 என்றும், ஹைதராபாத்தில் ரூ.4,585 என்றும், கேரளாவில் ரூ.4,583 என்றும், டெல்லியில் ரூ.4,795 என்றும், கொல்கத்தாவில் ரூ.4,803 என்றும், ஒசூரில் ரூ.4,588 என்றும், பாண்டிச்சேரியில் ரூ.4,587 என்றும் விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வால் நடுத்தர பெண்கள் கவலை அடைந்துள்ளனர். 

Similar News