யாஸ் புயல் ஒடிஸாவின் பாலசோர் அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது
யாஸ் புயல்தாம்ரா-பாலசோர் இடையே கரையை கடக்க தொடங்கியுள்ளது.இன்று காலை 9 மணியளவில் கரையை கடக்க தொடங்கியது வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒடிஸாவின் கோபால்பூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை. யாஸ் புயலால் கோபால்பூரில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல். யாஸ் புயலால் கடல் கொந்தளிப்புடன் காண்கிறது
ஒடிஸாவின் பாரதீப்பில் சூறாவளி காற்று வீசும்,கனமழை பெய்யும். வங்கக் கடலில் வடமேற்கு பகுதியில் யாஸ் மையம் கொண்டுள்ளது. தம்ராவிலிருந்து கிழக்கில் 40 கி.மீ. தொலைவில் யாஸ் புயல் மையம். பாலசோரிலிருந்து தென்கிழக்கில் 90 கி.மீ. தொலைவிலும் யாஸ் மையம் கொண்டு முன் பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளது. என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.