இன்று சூப்பர் பிளட் மூன் உடன் நிகழும் முழு சந்திர கிரகணம் -மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தகவல்
இந்தியாவில் இன்று மாலை 3.15 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.23 மணிக்கு முடியும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதையொட்டி ரத்த நிலா என்கிற அரிய நிகழ்வு இன்று வானில் தோன்றும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் இன்று நிகழும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சந்திர கிரகணம் என்பது சந்திரன், பூமி, சூரியன் இவை மூன்றும் ஒரே ஒரே நேர்கோட்டில் அமையும் போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதால் ஏற்படுகிறது. இந்த சந்திர கிரகணம் பௌர்ணமி தினத்தில் நிகழ்கிறது.
பார்டல் சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம், பேனும்ரல் என மூன்று வகை சந்திர கிரகணம் உள்ளது.தற்போது இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் மே 26ம் தேதி அன்று தோன்ற உள்ளது. இது முழு சந்திர கிரகணம் ஆகும். இந்த நிகழ்வில் சந்திரனின் மீது சூரியனின் கதிர்கள் விடுவதை பூமி முற்றிலும் தடுக்கிறது. இதனால் சந்திரன் இரத்த சிவப்பு நிறத்தில் தோன்றவுள்ளது . இதற்கு வானிலை விஞ்ஞானிகள் "சூப்பர் பிளட் மூன்" என்ற பெயர் சூட்டியுள்ளனர். இந்த முழு சந்திர கிரகணம் இந்தியாவில் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
முழுமையான சந்திர கிரகணத்தின் போது நிலவு கூடுதல் ஒளியுடன் ரத்தச் சிவப்பு நிறத்தில் மிளிரும். இதனால் இதனை ரத்த நிலா என அழைக்கிறார்கள்.இந்தியாவை பொருத்தவரை தமிழகத்தில் ரத்த நிலாவை காண முடியாது.சில நிமிடங்கள் மட்டுமே இந்த கண்கொள்ளா காட்சியை காண முடியும்.
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் இந்த முழு சந்திர கிரகணம் வானில் தெரியும் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இந்தியாவில் சந்திரன் உதித்ததும் மிக குறுகிய நேரம் மட்டுமே இந்த சந்திர கிரகணத்தை காண முடியும். மாலை 3.15 மணி முதல் 6.23 வரை இந்த கிரகணம் தோன்றும். இந்தியாவில் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் இந்த முழு சந்திர கிரகணத்தை காண முடியும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.