அனல் மின் நிலைய கொதிகலனுக்காக புதிய எல்.சி.சி.டி: விஞ்ஞானிகள் உருவாக்கம்

அனல் மின் நிலைய கொதிகலனுக்காக புதிய எல்.சி.சி.டி-யை (லேசர் க்லாட் கோட்டிங்) இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

Update: 2021-10-08 08:45 GMT

லேசர் க்லாட் கோட்டிங்.

அனல் மின் நிலையங்களில் கொதிகலன் பாகங்களுக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்கும் தனித்துவமான லேசர் அடிப்படையிலான பூச்சு தொழில்நுட்பத்தை (எல்சிசிடி LCCT) (லேசர் க்லாட் கோட்டிங்) இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

தற்போது பயன்படுத்தப்படும் மேற்பரப்பு தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் இது கொதிகலன் பாகங்களின் ஆயுளை 2- 3 மடங்கு அதிகரிக்க முடியும். இந்தத் தொழில்நுட்பம் அனல் மின் நிலையங்களின் கொதிகலன் பாகங்களுக்கு மட்டுமல்லாமல், அதிக வெப்பநிலை, அரிப்பு, அரிக்கும் சூழல் ஆகியவை தொடர்பான எந்தவொரு பொறியியல் பயன்பாட்டிற்கும் ஏற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.

Tags:    

Similar News