கடற்படை ஹெலிகாப்டர் மும்பை கடற்கரையில் அவசர தரையிறக்கம்
இந்திய கடற்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் மும்பை கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. படகில் இருந்த மூன்று பணியாளர்களும் மீட்பு;
இந்திய கடற்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) புதன்கிழமை மும்பை கடற்கரையில் அரபிக்கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான இலகு ரக ஹெலிகாப்டர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் 3 பேர் பயணித்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. உடனடியாக ஹெலிகாப்டரை விமானி அவசர அவசரமாக மும்பை கடற்கரை அருகே தரையிறக்கினார்.
ஹெலிகாப்டர் கடற்கரைக்கு அருகில் தரையிறங்கியது. உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
படகில் இருந்த மூன்று பணியாளர்கள் கடற்படை ரோந்து கப்பல் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.