வீரதீர செயல்புரிந்த கடற்படை வீரர்களுக்கு விருது
கொச்சி கடற்படை தளத்தில், வீரதீர செயல்புரிந்த கடற்படை வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
கடற்படையில் வீரதீர செயல்புரிந்த சாதனை படைத்த மற்றும் சிறந்த சேவை புரிந்த கடற்படை வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கொச்சி கடற்படை தளத்தில் நேற்று நடைபெற்றது. குடியரசுத் தலைவரின் சார்பில் கடற்படைத்தளபதி அட்மிரல் ஹரிக்குமார் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் 8 பேருக்கு வீரதீரத்திற்கான பதக்கங்கள் உள்பட மொத்தம் 31 பதக்கங்கள் அளிக்கப்பட்டது. அத்துடன் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந் தேதி அன்று ராஜஸ்தானில் நாகர் மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் மூழ்கிய ஒருவரை மீட்கும் பணியின் போது உயிர் தியாகம் செய்த ராமாவதார் கோதாராவின் தந்தைக்கு மரணத்திற்குப் பிந்தைய விருதான சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் வழங்கப்பட்டது.