இதே மே 11ம் நாளில்தான் ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் (Pokhran) அமெரிக்க உளவு அமைப்புக்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மூன்று அணுச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
இந்த அணுகுண்டு சோதனைகள் இந்தியாவிற்கு எதிராக அமேரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறுதரப்பட்ட வணிகத்தடைகளை விதிப்பதற்கு காரணமாக அமைந்தன. மேலும் அதே ஆண்டு பாகிஸ்தான் மே 28 மற்றும் மே 30ஆம் நாட்களில் அணுகுண்டு சோதனைகளை நடத்தத் தூண்டுதலாக அமைந்தது.
அந்நாளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகவும் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றிய - (பின்னாளில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற) முனைவர் அப்துல் கலாம் மற்றும் அணுசக்தித் துறையின் தலைவராக பணியாற்றிய முனைவர் ஆர்.சிதம்பரம் இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.
இந்த நாளை நினைவுறுத்துமாறுதான் ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுது.