நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல்காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜர்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகிறார்.

Update: 2022-06-20 04:16 GMT

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , எம்.பி.யுமான ராகுல் காந்தி ராகுல்காந்திக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தினர். அதன்படி ஏற்கனவே 3 நாட்கள் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் விசாரணைக்கு ஆஜராக தனக்கு மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என்று ராகுல்காந்தி தரப்பில் கூறப்பட்டது . அவரது கோரிக்கையை அமலாக்கத்துறை ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு அமலாக்கத்துறையில் இன்று ஆஜராகிறார் ராகுல்காந்தி. ஏற்கனவே 3 நாட்கள் விசாரணைக்கு ஆஜரான நிலையில் இன்று 4வது நாளாக ஆஜராகிறார் ராகுல்காந்தி

ராகுல் காந்தி ஆஜராக உள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக அவரது கட்சி நாடு முழுவதும் அமைதிப் போராட்டம் நடத்தவுள்ளது. 

Tags:    

Similar News