பொது சிவில் சட்டத்திற்கு இஸ்லாமிய பெண்கள் ஆதரவு: மெகா சர்வே முடிவு

யு.சி.சி.எனப்படும் பொது சிவில் சட்டத்திற்கு பெரும்பான்மை இஸ்லாமிய பெண்கள் ஆதரவு தெரிவித்து இருப்பது மெகா சர்வே முடிவில் தெரியவந்துள்ளது.

Update: 2023-07-10 10:18 GMT

Uniform civi code in tamil, Uniform civi code surve,பொது சிவில் சட்டத்திற்கு பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஆதரவு தெரிவித்து இருப்பது மெகா சர்வே முடிவில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது பேசு பொருளாக இருப்பது யு.சி.சி எனப்படும் யூனிபார்ம் சிவில் கோட் என்கிற பொது உரிமையியல் சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் ஆகும். பல மதங்கள், பல மொழிகள், பல இனங்கள் உள்ள நமது இந்திய திருநாட்டில் அவரவர் மதம், இனத்திற்கு தகுந்தாற்போல் வெவ்வேறு விதமான சட்ட விதிமுறைகள் உள்ளன. தற்போது உள்ள சட்டங்களின்படி நீதிமன்றங்கள் கூட இந்த விதிமுறைகளை மீறி தீர்ப்பு வழங்கி விட முடியாது.

அதனால் தான் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஒரே விதமான சட்டம் வேண்டும் என்பதற்காக தான் பொது சிவில் சட்டம் தேவை என்கிறது மோடி தலைமையிலான இந்திய குடியரசு. இது மோடியின் தனிப்பட்ட விருப்பம் அல்ல. அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் கடந்த நாடாளுமன்ற பொது தேர்தலின்போதே குறிப்பிடப்பட்டு உள்ளது.

Uniform civi code in tamil, Uniform civi code surve,ஆம்... கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பாரதிய ஜனதா  வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம், பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவோம் என்று கூறப்பட்டு இருந்தது.

இதில் ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை எட்டி திறப்பு விழா காணும்நிலையில் உள்ளது. எப்படியும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ராமர் கோவில் திறக்கப்படுவதன் மூலம் பாரதிய ஜனதாவின் முதல் தேர்தல் அஜண்டா ஓகே ஆகிவிடும்.

Uniform civi code in tamil, Uniform civi code surve,இரண்டாவது அஜண்டாவான பொது சிவில் சட்டத்தை அடுத்த ஆட்சியில் எப்படியும் நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதற்காக தான் பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது ‘நாடு ஒன்று சட்டம் இரண்டா’? என்ற ஒரு கேள்வியை எழுப்பி பொது சிவில் சட்டம் பற்றி சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில் இந்த சட்டத்தின் அவசியத்தை விளக்கி புரிதலை  ஏற்படுத்த வேண்டும் என அறைகூவல் விடுத்து இருக்கிறார்.

பொது சிவில் சட்டம் பற்றிய நாட்டு மக்களின் கருத்தை பதிவு செய்யும்படி மத்திய சட்ட கமிஷன் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளது. பொது சிவில் சட்டம் பற்றி அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

Uniform civi code in tamil, Uniform civi code surve,இந்த நிலையில் தான் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை பற்றிய பொதுவான சட்டங்களுக்கு ஆதரவாக பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் பொது  சிவில் சட்டத்திற்கு (யுசிசி) ஆதரவாக இருப்பது  தெரியவந்துள்ளது. இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்று நடத்திய  மெகா சர்வேயில் குறைந்தது 67.2 சதவீத முஸ்லிம் பெண்கள் திருமணம், விவாகரத்து மற்றும் தத்தெடுப்பு போன்ற விஷயங்களில் அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான சட்டத்தை ஆதரிப்பதாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 8,035 முஸ்லிம் பெண்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். 18 முதல் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், வெவ்வேறு சமூகங்கள், பிராந்தியங்கள், கல்வி மற்றும் திருமண நிலைகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர்.

பொது சிவில் சட்ட பிரகடனம் என்பது அனைத்து இந்திய குடிமக்களுக்கும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் பொருந்தும் ஒரு சட்டத்தை குறிக்கும். சட்டங்கள் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் பரம்பரை போன்ற தனிப்பட்ட விஷயங்களை உள்ளடக்கும்.

Uniform civi code in tamil, Uniform civi code surve,அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான சட்டங்களை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டபோது, ​​கணக்கெடுக்கப்பட்ட மொத்த பெண்களில் 67.2 சதவீதம் பேர் ‘ஆம்’ என்றும் 25.4 சதவீதம் பேர் ‘இல்லை’ என்றும், 7.4 சதவீதம் பேர் ‘தெரியாது அல்லது சொல்ல முடியாது’ என்றும் பதிலளித்துள்ளனர்.

யூசிசி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, ​​அனைத்து மதங்களையும் பாதிக்கும் என்று இந்தியாவில் உள்ள முஸ்லீம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து இருப்பது  குறிப்பிடத்தக்கது.

கல்வித் தகுதியின் அடிப்படையில், 68.4 சதவீதம் அல்லது 2,076 பட்டம் பெற்ற பெண்கள் யுசிசி ஐ ஆதரிப்பதாகவும், 27 சதவீதம் பேர் அதை ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், வயது வாரியான பதில்களில், 18-44 வயதுக்குட்பட்ட பெண்களில் 69.4 சதவீதம் பேர் யு.சி.சி.க்கு ஆதரவாக இருப்பதாகவும், 24.2 சதவீதம் பேர் அனைவருக்கும் பொதுவான சட்டங்கள் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

Tags:    

Similar News