மும்பை பள்ளியில் லிப்டில் சிக்கிய ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு

மும்பை பள்ளியில் லிப்டில் சிக்கிய ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2022-09-18 07:02 GMT

மும்பை பள்ளியில் லிப்டில் சிக்கி உயிரிழந்த ஆசிரியை.

மும்பை வசாயில் பகுதியை சேர்ந்தவர் ஜெனல் பெர்னாண்டஸ் (வயது26). இவர் மலாடு சிஞ்சோலி பந்தர் பகுதியில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியயைாக வேலை செய்து வந்தார். அந்த பள்ளியில் ஆறாவது மாடியில் மாணவர்களுக்கு பாடம் நடித்து முடித்த இவர் இரண்டாவது மாடியில் உள்ள ஓய்வறைக்கு செல்வதற்காக லிப்டில் ஏறினார்.

லிப்டின் கதவு சரியாக மூடப்படாத நிலையில் லிப்ட் மேல்நோக்கி அதாவது ஏழாவது மாடி நோக்கி சென்றது. இதில் கதவிற்கு இடையில் சிக்கிய ஜெனல் பெர்னாண்டஸ் சிக்கி கொண்டார்.அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மரண ஓலம் கேட்டு சக ஆசிரியர்களும், மாணவர்களும் ஓடி வந்து லிப்டில் இருந்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி தலையில் பலத்த காயம் அடைந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெனல் பெர்னாண்டஸ்க்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரது கணவர் மரைன்என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.  லிப்டில் சிக்கி ஆசிரியை இறந்த சம்பவம் அந்த வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News