முகேஷ் அம்பானியின் மகன் திருமணம்: கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் யார்?
முகேஷ் அம்பானியின் மகன் திருமணம்: கலந்துகொள்ளும் பிரபலங்களும் பட்டியல் வெளியாகியுள்ளது.;
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டுடன் ஜூலை 12 அன்று மும்பையில் திருமணம் செய்ய உள்ளார். திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை நடைபெற உள்ளன. இந்த விழாவில் வணிகத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் மற்றும் பிற பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வில் பார்க்கப்படக்கூடிய இந்திய விருந்தினர்களின் பட்டியல் இதோ:
வணிகத் துறையைச் சேர்ந்த ஆர்பிஎஸ்ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா, உதய் கோட்டக், அதார் பூனாவாலா, கௌதம் அதானி மற்றும் குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்ட பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.
கலந்துகொள்ளும் பிரபலங்களின் பட்டியல்:
- டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரா
- குமார் மங்கலம் பிர்லா மற்றும் குடும்பத்தினர்
- கௌதம் அதானி மற்றும் குடும்பத்தினர்
- கோத்ரெஜ் குடும்பம்
- நந்தன் நிலேகனி
- சஞ்சீவ் கோயங்கா
- ரிஷாத் பிரேம்ஜி
- உதய் கோட்டாக்
- அதார் பூனாவாலா
- சுனில் மிட்டல்
- பவன் முஞ்சால்
- ரோஷ்னி நாடார்
- நிக்கில் காமத்
- ரோனி ஸ்க்ரூவாலா
- திலீப் சாங்வி
அதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, ஹர்திக் மற்றும் குருணால் பாண்டியா, இஷான் கிஷன் மற்றும் பிறர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பட்டியல்:
- சச்சின் டெண்டுல்கர் மற்றும் குடும்பத்தினர்
- எம்எஸ் தோனி மற்றும் குடும்பத்தினர்
- ரோஹித் சர்மா
- கேஎல் ராகுல்
- ஹர்திக் மற்றும் குருணால் பாண்டியா
- இஷான் கிஷன்
அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், மாதூரி தீட்சித் மற்றும் கரண் ஜோஹர் போன்ற பாலிவுட் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழு பட்டியல்:
- அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர்
- அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன்
- ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தார்
- ஷாருக்கான் மற்றும் குடும்பத்தினர்
- ஆமிர்கான் மற்றும் குடும்பம்
- சல்மான் கான்
- அக்ஷய் குமார் மற்றும் ட்விங்கிள் கண்ணா
- அஜய் தேவ்கன் மற்றும் காஜல்
- சைஃப் அலி கான் மற்றும் குடும்பத்தினர்
- சங்கி பாண்டே மற்றும் குடும்பத்தினர்
- ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன்
- ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்
- விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப்
- மாதூரி தீட்சித் & ஸ்ரீராம் நேனே
- ஆதித்யா மற்றும் ராணி சோப்ரா
- கரண் ஜோஹார்
- போனி கபூர் மற்றும் குடும்பத்தினர்
- அனில் கபூர் மற்றும் குடும்பத்தினர்
- வருண் தவான்
- சித்தார்த் மல்ஹோத்ரா
- ஷ்ரத்தா கபூர்
- கரிஷ்மா கபூர்
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பாரம்பரிய முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ரிலையன்ஸ் பவுண்டேஷன் பகிர்ந்து கொண்ட சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோவில், குஜராத் பெண்கள் இந்த ஜோடியின் திருமணத்திற்காக பந்தினி தாவணிகளை நேர்த்தியாக வடிவமைத்தனர். ரிலையன்ஸ் பவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவரும் அனந்த் அம்பானியின் தாயாருமான நீதா அம்பானியும் அந்த வீடியோவில் இடம்பெற்றார்.