குரங்கு அம்மை நோய்: மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுரை

இதுவரை நாட்டில் இந்த தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-01 06:05 GMT

நாட்டில் குரங்கு அம்மை தொற்றால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோய் தொடர்பாக மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நோயாளிகளின் மாதிரிகளை புனேயில் உள்ள ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் தென்பட்டால், சம்பந்தப்பட்ட நபரை 21 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தொற்றால் பாதிக்கபபட்டவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்,குரங்கு அம்மை நோய் தொற்று தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News