நடிகர் மட்டும் அல்ல ராணுவ அதிகாரியாக மீட்பு பணியில் களம் இறங்கிய மோகன்லால்

Update: 2024-08-04 08:00 GMT

ராணுவ சீருடையில் மீட்பு பணியில் நடிகர் மோகன்லால்.

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்  மோகன்லால் நமக்கு ஒரு நடிகராக தான் தெரியும்/ ஆனால் அவர் ஒரு ராணுவ அதிகாரி என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆம்... நடிகர் மோகன்லால் தமிழ் படங்களிலும் நிறைய நடித்துள்ளார். மலையாள திரைப்பட உலகில் இப்போது வரை சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து வருகிறார் மோகன்லால். அவருக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. ஆனால் அதனை தனது இளம் வயதில் அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அதனை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மலையாள படத்தில் ராணுவ வீரராக நடித்தார். இதற்காக  நடத்தப்பட்ட படப்பிடிப்புகளின்போது ராணுவ அதிகாரிகளுடன் அவர் நெருங்கி பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்பொழுது அவர் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தினார்.


ஆனால் அதற்கான வயது தகுதி அப்போது அவருக்கு தடையாக இருந்தது. அதாவது டெரிடோரியல் ஆர்மி எனப்படும் பிரதேச ராணுவப்படையில் சேர வேண்டும் என்றால் கூட 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் மோகன்லால் 42 வயதை கடந்து விட்டார் என்பதால் வயது தடையாக இருந்தது. இருந்தாலும் அப்போது இருந்த  ராணுவ தளபதியாக இருந்த அதிகாரிகள் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் அவருக்கு வயது  தளர்வு வழங்கி பிரதேச ராணுவப்படையில் லெப்டினண்ட் கர்னல் ஆக சேர்த்தனர். ராணுவத்தில் சேர்ந்ததால் உடனடியாக ராணுவ பயிற்சி எடுத்துக் கொண்டார் .இது மோகன்லாலின் கடந்த கால வரலாறு.

ஆனால் அவர் அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் தற்போது கடவுளின் தேசம் எனப்படும் கேரள மாநிலத்தின் வயநாடு பகுதி  கடுமையான நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட மக்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு விட்டனர். நிலச்சரிவில் இருந்து மீண்டு உயிர் தப்பியவர்கள் வாழ்வாதாரங்கள் இழந்து தவிக்கிறார்கள். மீட்பு பணி ஒரு வாரம் ஆகியும் இன்னும் முடிந்த பாடில்லை. அண்டை மாநிலமான தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கடவுளின் தேசமான கேரள மக்களின் பரிதாப முடிவிற்கு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது.


ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். ஆனாலும் மண் புதையலுக்குள் சிக்கியவர்களை என் முழுமையாக மீட்க முடியவில்லை. தற்காலிக பாலம் அமைத்து ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தன்னார்வலர்களும் தங்கள் பங்குக்கு வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் மோகன்லால் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மூன்று கோடி ரூபாயை நிவாரண நிதியாக அறிவித்துள்ளார். பொதுவாக நமது தமிழ்நாட்டிலெல்லாம் நடிகர்கள் நிதியாக அளித்துவிட்டால் போதும் வேறு ஒன்றும் செய்ய மாட்டார்கள் .ஆனால் மோகன்லால் பாதிக்கப்பட்ட மக்களிடம் தானும் ஒரு  இராணுவ சிப்பாய் போல் பணியாற்றி வருகிறார். அதுவும் ராணுவ சீருடையில்.


பொதுவாக ராணுவ சீருடை என்பது எல்லோராலும் அணிய முடியாது .அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. இது திரைப்படம் அல்ல நடிப்பதற்கு. ரியல் ஷோ என்பதால் மோகன்லாலுக்கு எப்படி ராணுவ சீருடைய கிடைத்தது என்ற கேள்வி எழுந்தது. அப்போதுதான் அவர் ஏற்கனவே பிரதேச ராணுவப்படையில் சேர்ந்ததும் அதில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. தனக்கு கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள நடிகர் மோகன்லாலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tags:    

Similar News