மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்பார்: அமித்ஷா
2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்பார் என அமித்ஷா கூறியுள்ளார்.;
டில்லியில் நடந்த கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மற்றும் நக்சல் உள்ளிட்ட மிக நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்தப்பட்டது. எந்த வெளிநாட்டு சக்திக்கும் நம் நாட்டு விவகாரத்தில் தலையிட தயாராக இல்லை.
மக்கள் தான் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்வார்கள். நாட்டில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுள்ளேன். அதனடிப்படையில் சொல்கிறேன். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும். தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்பார்.
1970க்குப் பிறகு ஒருவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் என்ற பெருமையை பெறப்போகிறோம். 2019ம் ஆண்டில் பெற்ற இடங்களைவிட, 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்.” என்று கூறியுள்ளார்.