ஏப்ரல் 22-23 வரை பருவநிலை மாற்றம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாட்டை அதிபர் ஜோ பிடென் நடத்துவதற்கு முன்பு ஜான்கெர்ரி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு, குறிப்பாக புதுமைக்கு நிதி யளிப்பது மற்றும் பசுமை தொழில்நுட்பங்களை விரைவாக பயன்படுத்துவது ஆகியவை மற்ற நாடுகளில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று மோடி கூறியதாக அந்த அறிக்கை கூறுகிறது.2015 பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் பாதையில் உள்ளது என்று மோடி கெர்ரியிடம் கூறினார்.
காலநிலைக்கான சிறப்பு ஜனாதிபதி தூதரான கெர்ரி, தூய்மையான எரிசக்திக்கு மாறுவதில் இந்தியாவின் அபாயங்களைக் குறைப்பதற்காக "சலுகை நிதியை" மாநாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் நிதியை திரட்ட அமெரிக்கா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து மோடியுடன் பேசியதாக கூறினார்.
பின்னர் அமெரிக்கா "ஒரு சாதாரண வர்த்தக முதலீட்டிற்காக அதிக பணத்தை மேசைக்கு கொண்டு வர முடியும், அது விரைவில் மாற்று எரிபொருளை உற்பத்தி செய்யத் தொடங்கலாம்," என்று புது தில்லியில் இருந்து ஒரு சர்வதேச நாணய நிதிய கருத்தரங்கில் பேசிய கெர்ரி கூறினார்.2030-க்குள் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தின் தீவிரத்தை 33-35 சதவீதம் குறைக்கவும், புதைபடிவஎரிபொருள் அல்லாத எரிபொருள் மின் திறனை 2015-ல் 28 சதவீதமாக இருந்த தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கவும், கார்பன் டை ஆக்சைடை குறைக்க வனபாதுகாப்பை கணிசமாக அதிகரிக்கவும் இந்தியா உறுதி பூண்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் கூறுகையில், 2030ஆம் ஆண்டிற்குக்குள் பொருளாதார உற்பத்தியில் ஒரு யூனிட்டுக்கு கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை 33-35 சதவீதம் குறைப்பதாக இந்தியா ஏற்கனவே 21 சதவீத உறுதிமொழியை எட்டியுள்ளது என்றார்.
பாரிஸ் உடன்படிக்கை உலகெங்கிலும் சராசரி வெப்பநிலை அதிகரிப்பை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடுகையில் 2 டிகிரி செல்சியஸ் (3.6 டிகிரி பாரன்ஹீட்) "மிகவும் குறைவாக" வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.2 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும் போது, உலகின் பெரும் பகுதிகளில் பேரழிவு விளைவை ஏற்படுத்தும், கடல் மட்டத்தை உயர்த்தும், வெப்பமண்டல புயல்களை தூண்டிவிடும் மற்றும் வறட்சி மற்றும் வெள்ளம் மோசமடையக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
செவ்வாயன்று கெர்ரியுடனான சந்திப்பின்போது, இந்தியாவின் நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன், வளரும் நாடுகளுக்கு நிதி யளிப்பதில் வளர்ந்த நாடுகள் தங்கள் வருடாந்திர அர்ப்பணிப்பை வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார், இதன் மூலம் அவர்கள் உலக வெப்பமயமாதலை எதிர்கொள்ள குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும்.