தேசிய வழிநடத்தும் குழுவை அமைத்தது கல்வி அமைச்சகம்

தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான தேசிய வழிநடத்தும் குழுவை கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது

Update: 2021-09-21 18:11 GMT

தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான தேசிய வழிநடத்தும் குழுவை கல்வி அமைச்சகம் 2021 செப்டம்பர் 21 அன்று அமைத்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் த கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான இக்குழுவில் கல்வித்துறை நிபுணர்களான என் ஐ இ பி ஏ வேந்தர் மகேஷ் சந்திர பந்த், தேசிய புத்தக அறக்கட்டளைத் தலைவர் கோவிந்த் பிரசாத் சர்மா, ஜாமியா மிலியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமிகு நஜ்மா அக்தர், ஆந்திரப்பிரதேச மத்தியப் பழங்குடிப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் டி வி கட்டிமணி, பிரான்சு நாட்டைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் மைக்கேல் டானினோ, ஜம்மு ஐஐஎம் தலைவர் மிலிந்த் கும்ப்ளே, பஞ்சாப் மத்தியப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் (டாக்டர்) ஜக்பீர் சிங், கணிதவியல் நிபுணர் மஞ்சுள் பார்கவா, சமூக ஆர்வலரும் ஆய்வாளருமான எம் கே ஸ்ரீதர், எல் எல் எஃப் நிறுவன இயக்குநர் தீர் ஜிங்க்ரன், ஏக்ஸ்டெப் ஃபௌண்டேசன் தலைமைச் செயல் அதிகாரி சங்கர் மருவாடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் அம்சங்களின் படி, நான்கு தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புகளை இக்குழு உருவாக்கும் - பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு, ஆரம்பகாலக் குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம், ஆசிரியர் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் வயது வந்தோர் கல்விக்கான தேசியப் பாடத்திட்ட அமைப்பு.

பாடத்திட்டச் சீர்திருத்தங்களை முன்மொழிய இந்த நான்கு பகுதிகளுடன் தொடர்புடைய தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் அனைத்துப் பரிந்துரைகளையும் மையமாகக் கொண்டு பள்ளிக் கல்வி, ஆரம்ப கால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE), ஆசிரியர் கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை இந்தக் குழு விவாதிக்கும்.

தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பிற்கான தொழில்நுட்பத் தளத்தில் பெறப்பட்ட மாநிலப் பாடத்திட்டக் கட்டமைப்பிலிருந்து உள்ளீடுகளை இந்தக் குழு ஈர்க்கும்.

பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து, அதாவது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் என் சி இ ஆர் டி மற்றும் கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழுவின் நிர்வாகக் குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் இருந்து பெறப்பட்ட பரிந்துரைகளைச் சேர்த்த பிறகு, தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்புகளை இந்தக் குழு இறுதி செய்யும்.

Tags:    

Similar News