சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் நேரு, ரகுபதி, பெரியசாமி விடுதலை
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் நேரு, ரகுபதி, பெரியசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் தற்போது அமைச்சர்களாக இருப்பவர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி.
1996 முதல் 2001 வரையிலான கருணாநிதி தலைமையில் நடந்த தி.மு.க. ஆட்சியிலும் இவர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள்.அப்போது இவர்கள் மற்றும் அப்போது அமைச்சராக இருந்த கோ.சி. மணி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அடுத்து வந்த அ.தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த வழக்கை தொடர்ந்து இருந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. 2015ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு முறையீடு செய்தது
அ.தி.மு.க .அரசு அமைச்சர்கள் நேரு,ரகுபதி, ஐ. பெரியசாமி மற்றும் கோ.சி. மணி ஆகியோர் மீது தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவாய், நரசிம்மா அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோ.சி. மணி ஏற்கனவே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.