காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிர்ச்சேதம் குறித்து தகவல்இல்லை

ஜம்மு காஷ்மீரின் வடக்கு பகுதியில், ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. உயிர்ச்சேதம் குறித்து, இதுவரை தகவல் இல்லை.;

Update: 2022-03-11 10:25 GMT

கோப்பு படம்

காஷ்மீரின் வடக்கு பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டு அருகே, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் உள்ளனர். இவர்களை அப்பகுதிக்கு அழைத்துச் செல்ல, ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.

அவ்வகையில், இன்று காலை புறப்பட்ட ஹெலிகாப்டர், குரேஸ் செக்டார் பகுதியில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டர் நொறுங்கியது. எனினும், விபத்தில் உயிர்ச்சேதம் உள்ளதா என்பது குறித்து தகவல் இல்லை.

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்து நேரிட்டிருக்கலாம் என்று, முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

Live Updates
2022-03-11 10:46 GMT

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிர்ச்சேதம் குறித்து தகவல்இல்லை

Tags:    

Similar News