முகக்கவசம் மீண்டும் கட்டாயம்? கொரோனா பரவல் அதிகரிப்பால் அரசு ஆலோசனை
கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து முகக்கவசம் அணிவதை கட்டாயமக்குவது பற்றி மகாராஷ்டிரா அரசு பரிசீலித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும் ஒரு சில மாநிலங்களில் அவ்வப்போது, இதன் தாக்கம் அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் சில இடங்களில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், கொரோனா பெருந்தொற்றின் தாக்கம், வழக்கத்துக்கு மாறாக, சற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிரது. நேற்று முன் தினம் அங்கு 1081 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த பிப்ரவரி 24 க்கு பிறகு அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
இதையடுத்து, மகாராஷ்டிராவில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், மகாராஷ்டிராவில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. தொற்று பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கப்படும் என்றார்.