விவசாயி மகனை திருமணம் செய்தால் ரூ.2 லட்சம் பரிசு

விவசாயி மகனை திருமணம் செய்தால் மணப்பெண்ணுக்கு ரூ.2 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.;

Update: 2023-03-10 16:45 GMT

முன்னாள் முதல்வர் குமாரசாமி.

கர்நாடக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியைப் மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரசும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. இந்நேரத்தில் ஜனதா தளம் எஸ் கட்சியின் தலைவர் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை தொடங்கியுள்ளார்.

யாத்திரையின் போது தொண்டர்கள் மத்தியில் பேசிய குமாரசாமி, விவசாயிகள் கடன்காரர்களாக இருக்கக் கூடாது என்று தெரிவித்தார். மேலும், தாம் மீண்டும் ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் முன் பணம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

விவசாயிகளின் குழந்தைகள் தரமான கல்வியை பெறுவதற்காக கிராமங்கள் தோறும் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் குமாரசாமி அறிவித்தார். அண்மையில் 30 வயதிற்கு மேலாகியும் பெண் கிடைக்காததால் திருமணம் செய்யாத இளைஞர்கள் பேரணி நடத்தியதை குறிப்பிட்ட அவர், இதுபோல் விவசாயிகளின் மகன்கள் பலர் திருமணமாகாமல் இருப்பதாக வேதனை தெரிவித்தார். இந்த துயரத்தை போக்க விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று குமாரசாமி அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News