விபத்தில் தான் இறந்ததாக கூறி நிவாரணப் பணத்தைப் பெற முயன்ற மனைவி மீது கணவன் புகார்

கட்டாக்கை சேர்ந்த கீதாஞ்சலி தத்தா, ஜூன் 2ஆம் தேதி நடந்த விபத்தில் தனது கணவர் பிஜய் தத்தா இறந்துவிட்டதாகவும், ஒரு உடலை தனது கணவருடையது எனவும் அடையாளம் காட்டியிருந்தார்.;

facebooktwitter-grey
Update: 2023-06-07 11:19 GMT
விபத்தில் தான் இறந்ததாக கூறி நிவாரணப் பணத்தைப் பெற முயன்ற மனைவி மீது கணவன் புகார்

ஒடிசா ரயில் விபத்து 

  • whatsapp icon

பாலசோர் ரயில் விபத்தில், மாநில அரசும், ரயில்வேயும் அறிவித்த இழப்பீட்டுத் தொகைக்காக, தன் கணவர் இறந்துவிட்டதாக கூறிய முயன்ற பெண் சிக்கலில் சிக்கியுள்ளார்.

கட்டாக் மாவட்டத்தில் உள்ள மணிபண்டாவைச் சேர்ந்த கீதாஞ்சலி தத்தா, ஜூன் 2ஆம் தேதி நடந்த விபத்தில் தனது கணவர் பிஜய் தத்தா இறந்துவிட்டதாகவும், ஒரு உடலை தனது கணவருடையது என அடையாளம் காட்டியுள்ளார். ஆனால், ஆவணங்களைச் சரிபார்த்ததில், அவரது கோரிக்கை பொய்யானது எனத் தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் எச்சரித்து அவரை விடுவித்த போதிலும், அவரது கணவர் மணியபந்த காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து பிரச்சனை தொடங்கியது. கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அப்பெண் தற்போது தலைமறைவாகி விட்டார். இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலசோர் ரயில் சோகத்தில் அவர் இறந்துவிட்டதாக மனைவி அறிவித்ததை அடுத்து அந்த பெண்ணின் கணவரே புகார் அளித்தார்

பாலசோர் ரயில் சோகத்தில் அவர் இறந்துவிட்டதாக மனைவி அறிவித்ததை அடுத்து அந்த பெண்ணின் கணவரே புகார் அளித்தார்

"நான் வெட்கப்படுகிறேன். இதுபோன்ற பெண்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நான் காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளேன், எனக்கு நீதி வேண்டும்" என்று கணவர் கூறினார்.

பொதுப் பணத்தை அபகரிக்க முயன்றதற்காகவும், தான் மரணமடைந்து விட்டதாக பொய் கூறியதற்காகவும் கீதாஞ்சலி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிஜாய் கோரியுள்ளார்.

மணிபண்டா காவல் நிலைய பொறுப்பாளர் பசந்த் குமார் சத்பதி , சம்பவம் நடந்த பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கீதாஞ்சலியின் கணவரிடம் கூறியுள்ளார்

இதற்கிடையில், தலைமைச் செயலாளர் பிகே ஜெனா, உடல்கள் மீது போலி உரிமை கோருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே மற்றும் ஒடிசா காவல்துறையினரைக் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்தார், பிரதமர் நரேந்திர மோடி ரூ. 2 லட்சம் இழப்பீடு அறிவித்தார். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜூன் 2 அன்று இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியது, அதன் பெரும்பாலான பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 288 பேர் இறந்தனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Tags:    

Similar News