பவானிபூர் தொகுதி இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்

பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.;

Update: 2021-09-10 15:02 GMT

இடைத்தேர்தலில் போட்டியிட மம்தா பானர்ஜி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பவானிபூர் தொகுதியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைன், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக வழக்கழிஞர் பிரியங்கா திப்ரூவலை பாஜக களமிறக்கியுள்ளது.

பவானிப்பூர் தொகுதியில் வரும் செப்-30 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News