கஸ்தூரிபாய் காந்தி (மகாத்மா காந்தியோட ஒய்ப்) பர்த் டே டுடே

மகாத்மாவின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி அசாதாரணமான பெண்மணி மன்னிக்கும் குணம் உடையவர், மிக தைரியமானவர் விசுவாச குணமுடையவர்;

Update: 2022-04-11 02:22 GMT

மகாத்மாவின் மனைவி கஸ்தூரிபா ஓர் அசாதாரணமான பெண்மணி. எதையும் மன்னிக்கும் குணம் உடையவர், மிக தைரியமானவர். நம்பமுடியாத அளவுக்கு விசுவாச குணமுடையவர். காந்தியின் மிக விசுவாசமுடைய சிஷயை மட்டும் அல்ல; அவரை கூர்மையாக விமர்சிக்கும் செல்வாக் குடைய விமர்சகரும் கூட. கஸ்தூர்பா வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு மட்டுமல்ல. லார்ட் அட்டென்பரோ

சொர்க்கத்தில் உள்ள மகான்களோடு வாழ்வது பேரின்பமும் மகிமையும் ஆகும். ஆனால் இப்புவியில் ஒரு மகானோடு வாழ்வதோ? அது வேறு ஒரு விஷயமாகும்! காந்தியின் செயலாளர் மஹாதேவதேசாய்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் கஸ்தூர்பா கபாடியாவும் ஒரே ஆண்டில் -1869- குஜராத்தின் கடலோர ஊரான போர்பந்தரில் பிறந்தவர்கள்.

கஸ்தூரிபாவின் தந்தை கோகல்தாஸ் கபாடியா ஆப்பிரிக்க, அரேபிய மார்கெட்டுகளில் துணி, தானியம், பஞ்சு ஆகியவற்றில் வியாபாரம் செய்தவர். காந்தியின் தந்தை கரம்சந்த் காந்தி போர்பந்தர் ஆட்சியாளர் ராணாவிற்கு திவானாக செயல்பட்டவர். மோகன்தாசுக்கும் கஸ்தூர்பாவுக்கும் 7 வயதில் நிச்சயதார்த்தமும் 13 வயதில் திருமணமும் நடந்தது.

காந்தியின் பேரனும் மோதிலால் காந்தியின் மகனுமான அருண் காந்தி – எல்லோருடைய கருத்துப்படி கஸ்தூரிபா அனைவரையும் தன்வயப்படுத்தும் பெண் ஆக இருந்தார் என்றும் அவள் புத்திசாலி, சுதந்திரமாக செயல் படுபவள்; பயமற்றவள்; மிகவும் அழகானவள் என்றும் தனது கஸ்தூர்பா-ஒரு வாழ்க்கை என்னும் நூலில் குறிப்பிடுகிறார்

Similar News