ஹோலிப் பண்டிகை நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

Update: 2021-03-29 03:15 GMT

முன்பு ஹோலியைக் கொண்டாடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த இளவேனிற்காலத்தில் அரும்பும் மரங்கள் அழிந்துவிட்டதால், அதற்குப் பதிலாகத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் செயற்கைச் சாயங்களே இந்தியாவின் பெரும்பாலான நகர்புறங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன

கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு.

இரணியன் என்னும் அசுரன் தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ணினான். இரணியனின் மகன் பிரகலாதன் அதை மறுத்தான் பிரகலாதன் மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று பூஜித்து வந்தான். மகனென்றும் பாராமல் பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு தீர்வுக்கான இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான்.

ஹோலிகா நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன் பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்று இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் இரணியன் தன் சகோதரி ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள்.

இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.

ஹோலிப் பண்டிகை நாட்டு மக்களுக்கு புத்துணர்ச்சியையும், புதிய உத்வேகத்தையும் நல்கட்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த தனது ட்விட்டரில், "நாட்டு மக்களுக்கு ஹோலி வாழ்த்துகள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, சமூக நல்லிணக்கத்திற்கு வித்திடும் பண்டிகை. இந்தத் திருநாள் நமது தேசத்தின் பன்முகத்தன்மையையும், தேசியவாதத்தின் ஆன்மாவையும் வலுப்படுத்தட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் ஹோலி வாழ்த்துகள். ஹோலிப் பண்டிகை நம் தேசத்தின் பன்முகத்தன்மையின் ஒவ்வொரு நிறத்தையும் சுட்டிக் காட்டக் கூடியது என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ண மயமாக கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி, இந்த விழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள். ஹோலி பண்டிகையண்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கலர் பொடிகளைத் தூவியும் திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.


Tags:    

Similar News