இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்குது கொரோனா தொற்று; ஒரே நாளில் 7 பேர் பலி

latest covid news in tamil- இந்தியாவில், மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கேரளா, மஹாராஷ்டிராவில் தலா மூவர். கர்நாடகாவில் ஒருவர் என, ஒரே நாளில் 7 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Update: 2023-03-29 09:48 GMT

கோவிட் வைரஸ் மாதிரி படம் 

latest covid news in tamil, new covid cases in india today, today corona cases in india last 24 hours, covid cases in india in last 48 hours today-இந்தியாவில், மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை ஒரு நாளில், ஏழு ஆக அதிகரித்து,  மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5,30,848 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா 3, கர்நாடகா 1 மற்றும்  கேரளா 3 என ஏழு பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவில், கோவிட் தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை இதுவரை, 4.47 கோடியாக (4,47,09,676) பதிவு செய்யப்பட்டுள்ளது. நடுத்தர வயது மற்றும்  பெரியவர்களுக்கு கூடுதல் கோவிட் ஜாப்கள் தேவையில்லை என்று WHO கூறுகிறது. உலக சுகாதார நிறுவனம் வழக்கமான, நடுத்தர மற்றும் பெரியவர்களுக்கு கூடுதல் கோவிட் -19 தடுப்பூசி பூஸ்டர் டோஸ்களை இனி பரிந்துரைக்கவில்லை என்று கூறியது, இதன் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றும் கூறியது.

ஏற்கனவே முதன்மை தடுப்பூசி மற்றும் ஒரு பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளவர்களுக்கு, மேலும் எந்த ஆபத்தும் இல்லை என்று WHO ன் தடுப்பூசி நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு,  2,000-த்தை தாண்டி வருகிறது. இந்தியாவில் நேற்று ஒருநாளில் கொரோனா பாதிப்பு 2,151 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து கொண்டே இருக்கிறது.


கடந்த திங்கள்கிழமையன்று 24 மணிநேரத்திலான கொரோனா பாதிப்பு, 1805 ஆக பதிவாகி இருந்தது. நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1573 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில் இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டி உள்ளது.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,151 ஆக பதிவாகி உள்ளது. கடந்த 5 மாதங்களுக்குப் பின் மிக அதிகமான ஒருநாள் கொரோனா பாதிப்பு இது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 11,000-த்தை தாண்டியுள்ளது.


நாட்டின் கொரோனா நிலவரம்

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 11,336 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் தற்போது 11,903 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, 0.03 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.78 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 1,222 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,66,925 பேர்.

கடந்த 24 மணி நேரத்தில், 2,151 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.51 சதவீதம், வாராந்திர பாதிப்பு விகிதம் 1.53. சதவீதம்இதுவரை மொத்தம் 92.13 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,42,497 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.


இந்திய அளவில் மிக குறைவாக, தொற்று எண்ணிக்கை இருந்த நிலையில், ஒரே நாளில் ஏழு  பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பதும், ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை 2ஆயிரத்தை கடந்திருப்பதும்,தொற்று மீண்டும் வேகம் எடுத்திருப்பதை தெளிவுபடுத்துகிறது, மத்திய அரசு, நோய் தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்த, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்களும், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, நோய் தொற்றை தவிர்க்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 


பொது இடங்களுக்குச் செல்லும் போது முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை சுத்தமாக பராமரித்தல் மற்றும் நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பு இல்லாமல் இருத்தல், போன்ற எச்சரிக்கைகளுடன் நடந்துகொள்வது மிகவும் முக்கியம்.

Tags:    

Similar News