வங்கிகளில் ரூ. 2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கடைசி தேதி நீட்டிப்பு

வங்கிகளில் ரூ. 2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கடைசி தேதி அக் 7 வரை நீட்டிப்பு. அக் 8-ம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம்.

Update: 2023-09-30 11:59 GMT
பைல் படம்

:2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது . முந்தைய காலக்கெடு இன்றுடன் முடிவடைவதாக இருந்தது.

ஒப்டோபர் 8-ம் தேதி முதல் வங்கிகள் ரூ. 2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்வதை நிறுத்தும் . இருப்பினும், ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மக்கள் ரூ 2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் . இந்திய தபால் மூலம் ரிசர்வ் வங்கியின் "வெளியீட்டு அலுவலகங்களுக்கு" தபால் மூலமாகவும் நோட்டுகளை அனுப்பலாம்.

மே 19ம் தேதி வரை புழக்கத்தில் இருந்த ரூ. 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 நோட்டுகள் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது மே 19 ஆம் தேதி வரை புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 ரூபாய் நோட்டுகளில் 96 சதவீதம் திரும்பி வந்ததாக தரவுகள் காட்டுகின்றன .

Tags:    

Similar News