வீட்டுக்குள் புகுந்த ராஜநாகம்: வீடியோவில் பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட மயக்கம்
வீட்டுக்குள் புகுந்த ராஜநாகம்: பிடிபட்டது எப்படி? வீடியோவில் பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட மயக்கம் பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.;
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதாவது பாம்பை பார்த்தால் ராணுவ படை கூட ஒரு நிமிடம் நடுங்கி விடும் என்பது தான் இதன் பொருள். சாதாரண பாம்புக்கே இந்த நிலை என்றால் பாம்புகளின் அரசன் எனப்படும் ராஜநாகம் அதாவது கிங் கோப்ரா வீட்டுக்குள் புகுந்தால் என்ன ஆகும்? அதனை பற்றி தான் இந்த செய்தியில் நாம் விரிவாக பார்க்க போகிறோம்.
கர்நாடக மாநிலம் அகும்பே கிராமத்தில் 12 அடி நீளமுள்ள ராஜ நாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வீட்டின் வளாகத்தில் உள்ள புதர்களுக்குள் பாம்பு பதுங்கி இருந்தது. உடனடியாக வீட்டின் உரிமையாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். எனினும், கிங் கோப்ரா மீட்கப்பட்டுள்ளது. கிங் கோப்ரா உலகின் மிக நீளமான விஷப் பாம்பு என்பது நாம் சொல்லி தான் தெரியவேண்டியது அல்ல. அதன் நீளம் 18 அடி வரை கூட சில இடங்களில் இருக்கும்.
கர்நாடக மாநிலம் அகும்பே கிராமத்தில் 12 அடி உயரமுள்ள ராஜ நாகம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து மக்களிடையே பீதி ஏற்பட்டது. எனினும், கிங் கோப்ரா மீட்கப்பட்டுள்ளது. அகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையத்தின் (ARRS) கள இயக்குநர் அஜய் கிரி, இந்த மீட்பு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
12 அடி நீளமுள்ள பாம்பு சாலையைக் கடப்பதை சிலர் கவனித்ததாக கிரி கூறினார். வீட்டின் வளாகத்தில் உள்ள புதர்களுக்குள் பாம்பு மறைந்தது. இவர்களது வீட்டிற்குள் விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று இருப்பதை அறிந்த வீட்டு உரிமையாளர்கள் பீதியடைந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஏஆர்ஆர்எஸ்-க்கு தகவல் தெரிவித்தனர். ARRS பணியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதுகுறித்து ஆய்வு மையத்தின் கள இயக்குநர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 'வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கவலையடைந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ARRS நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் மக்களை அழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினோம் என்றார்.
கிரி பகிர்ந்த வீடியோவில், பாம்பு மீட்புக் குழு எவ்வாறு பாம்பை வளாகத்திலிருந்து கவனமாக அகற்றியது என்பதைக் காட்டுகிறது. இந்த வீடியோவை IFS அதிகாரி சுசாந்தா நந்தாவும் தனது எக்ஸ் வலைத்தளத்தில் மறுபதிவு செய்துள்ளார். பிடிபட்ட பின்னர் பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. கிங் கோப்ரா உலகின் மிக நீளமான விஷப் பாம்பு ஆகும், அதன் நீளம் 18 அடி வரை கூட இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் கிங் கோப்ரா தொடர்பான காட்சிகளை பார்த்த சிலருக்கும் மயக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. வீடியோவில் பார்த்தவர்களே மயங்கினார்கள் என்றால் நேரில் பார்த்தவர்களின் நிலை என்ன ஆகி இருக்கும். காரணம் அதன் உருவம், மற்றும் அதன் சீறல்கள் அப்படி இருக்கும் என்கிறார்கள் பாம்பு பிடி வல்லுனர்கள்.
ராஜ நாகப்பாம்புகள் எனப்படும் இந்த கிங் கோப்ராக்கள் முக்கியமாக இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. அவை தங்குவதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை மிக முக்கியமானது என்பதால் குளிர் பிரதேசங்களில் தான் இவற்றை அதிக அளவில் பார்க்க முடியும். இந்தியாவில் குறிப்பாக கேரள மாநிலத்தின் தேயிலை தோட்டங்களில் இவற்றை அதிக அளவில் காண முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.