ஆம்புலன்ஸ் மீது மோதிய அமைச்சரின் பைலட் வாகனம்: மூவர் காயம்
கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டியின் பைலட் வாகனம், கொட்டாரக்கரா புலமன் சந்திப்பு அருகே ஆம்புலன்ஸ் மீது மோதியதில் நோயாளி உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
கேரளாவின் கல்வி அமைச்சர் வி சிவன்குட்டியின் பைலட் வாகனம் புதன்கிழமை கொட்டாரக்கரா புலமன் சந்திப்பில் ஆம்புலன்ஸ் மீது மோதியதில் ஒரு நோயாளி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் முழுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது காட்சிகள் வெளியாகியுள்ளன. பைலட் வாகனம் மற்றொரு திசையில் இருந்து அதிவேகமாக வந்து ஆம்புலன்ஸ் மீது மோதியதால் ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததை வீடியோ கிளிப்புகள் காட்டுகின்றன. பின்னர் பைலட் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அவர்கள் கீழே விழுந்தனர். ஆனால் அவர்கள் காயமின்றி தப்பித்தனர்.
காயமடைந்தவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் உதவி செய்தனர். பின்னர் அவர்கள் கொட்டாரக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அமைச்சர் கோட்டயத்தில் இருந்து எம்.சி.ரோடு வழியாக திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. அமைச்சரின் வாகனத்திற்கு முன்னால் சென்ற போலீஸ் ஜீப் ஆம்புலன்ஸ் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவிழ்ந்த ஆம்புலன்ஸ் சாலையில் சறுக்கிக் கொண்டே , பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவருக்கு அருகில் வந்தது, ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடியதால் தப்பினார். அமைச்சர் சிவன்குட்டி, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பைலட் வாகனம் இன்றி பயணத்தைத் தொடர்ந்தார்.