கேரளாவில் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாம்!
அனைத்து பொது இடங்களிலும், பணியிடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி கேரள அரசு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது
அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலம் மீண்டும் கோவிட் பரவும் அபாயத்தில் இருப்பதால் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அனைத்து பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் உத்தரவில், கோவிட் தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கடைகள், திரையரங்குகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், மக்களுக்கு சானிடைசர்களை ஏற்பாடு செய்யுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
சாத்தியமான கோவிட் எழுச்சி பற்றிய கவலைகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட உத்தரவு, அடுத்த 30 நாட்களுக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அமலில் இருக்கும்.
திங்களன்று, இந்தியாவில் 114 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் பாதிப்புகள் 2,119 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. தேசிய கோவிட் மீட்பு விகிதம் 98.80 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கன்சார்டியம் தரவுகளின்படி, அமெரிக்காவில் பாதிப்புகளுக்கு அதிகரிப்புக்கு காரணமான XBB.1.5 மாறுபாட்டின் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 26 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் உட்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் XBB.1.5 மாறுபாட்டின் பாதிப்புகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.