கர்நாடகா தேர்தல்: ஆட்சி அமைக்கப்போவது யார்? தொங்கு சட்டசபையா?

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது

Update: 2023-05-10 13:39 GMT

2023 கர்நாடக சட்டசபை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், அதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. அதற்கான விடை சனிக்கிழமை (மே 13) கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் யார் வெற்றி பெறுவார்கள் என தெரியவந்துள்ளது

பி-மார்க் கருத்துக்கணிப்பின்படி, பாஜக 85 முதல் 100 இடங்களிலும், காங்கிரஸ் 94 முதல் 108 இடங்களிலும் வெற்றிபெறலாம். இதற்கிடையில், கருத்துக் கணிப்புகளின்படி, ஜனதா தளம் (எஸ்) 24 முதல் 32 இடங்களைப் பிடிக்கலாம்.

ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு கணிப்புகளின்படி, பாஜக 94 முதல் 117 இடங்கள் வரை வெல்லும் என்றும், காங்கிரஸ் 91 முதல் 106 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் கூறுகிறது. ஜேடி(எஸ்) 14 முதல் 24 இடங்கள் வரை வெற்றி பெறலாம்.

Matrize கருத்துக் கணிப்புகளின்படி, காங்கிரஸ் 103 முதல் 118 இடங்களிலும், பாஜக 79 முதல் 94 இடங்களிலும் வெற்றிபெறலாம். கருத்துக் கணிப்புகளின்படி, ஜனதா தளம் (எஸ்) 23 முதல் 33 இடங்களைப் பிடிக்கலாம்.

ரிபப்ளிக் பி-மார்க் கருத்துக்கணிப்பின்படி 101 இடங்களுடன், கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருக்கும். ஆளும் பாஜக இரண்டாவது இடத்திலும், ஜேடிஎஸ் மூன்றாவது இடத்திலும் கிங் மேக்கராக உருவாகும் என கணிப்புகள் கூறுகின்றன.

இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் கணிப்புப்படி, கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற உள்ளது, 19 இடங்களில் 16 இடங்களில் வெற்றி பெறும்.

இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் கணிப்புப்படி, மத்திய கர்நாடகாவில் காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி பெங்களூரு பகுதியில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி, மும்பை-கர்நாடகா பகுதியில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனதா தளம் (எஸ்) ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றக்கூடும். 

இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் கணிப்புப்படி, ஹைதராபாத்-கர்நாடகா பகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று 32 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.  

Tags:    

Similar News