தமிழகத்திற்கு எதிராக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம்..!
மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.;
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டசபையில் கடந்த சில தினங்களுக்கு முன் தீர்மானம் இயற்றினர். தமிழகம் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக கர்நாடகாவிலும் தீர்மானம் கொண்டு என வரப்படும் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார். இதைக் கண்டித்து கர்நாடக சட்டசபையில் நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பேசினார். நாம் காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மீறவில்லை. தீர்ப்பின்படி, 177.25 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்துக்கு வழங்குகிறோம்; மேகதாது அணை விஷயத்தில் அழுத்தம் கொடுத்து சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறப்படும் என்றார். இதையடுத்து இன்று நடந்த கர்நாடகா சட்டசபை கூட்டத்தொடரில், பசவராஜ் பொம்மை தமிழகத்திற்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.