குழந்தை பருவ காதலிக்காக வேலை கேட்டு உருக்கம்: சிஇஓ பதிவு வைரல்

குழந்தை பருவ காதலியை மணக்க இளைஞர் ஒருவர் வேலை கேட்ட உருக்கமான விண்ணப்பத்தை சிஇஓ.,வின் பதிவு வைரலாகியுள்ளது.

Update: 2024-06-14 07:52 GMT

இணையத்தில் வைராகும் கடிதம்.

பெங்களூரு அர்வா ஹெல்த் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தனது நிறுவனத்தில் முழு ஸ்டாக் டெவலப்பர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்திருந்தார். இந்த விண்ணப்பங்களின் பரிசீலனையின்போது ஒரு விண்ணப்பதாரரின் காதல் வாழ்க்கையைப் பற்றி அவர் அறிந்து கொள்வார் என்று அவர் நினைத்துகூட பார்க்கவில்லை. ஆனால் அதுதான் தீபாலி பஜாஜுக்கு நடைபெற்றுள்ளது. அந்த விண்ணப்பத்தில் எனக்கு வேலை கிடைத்தால் தான் என் குழந்தை பருவ காதலியை மணக்க முடியும் என உருக்கமான பதிலை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அர்வா ஹெல்த் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தனது சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில், அந்த விண்ணப்ப படிவத்தின் ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

வேலை விண்ணப்பத்தில் இந்த பதவிக்கு ஏன் பொருத்தமாக இருப்பீர் என்று நினைக்கிறீர்கள்? எனக் கேட்டபோது, அந்த இளைஞர் தன்னுடைய உண்மையாக கூறியுள்ளார். அந்த பதிலில் வேலை கிடைத்தால் தனது குழந்தை பருவ காதலியை  திருமணம் செய்து கொள்ள முடியும். மேலும் தனது காதலியின் தந்தை தான் வேலையில்லாமல் இருப்பதால் இருவரும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க மறுத்துவிட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

எனக்கு இந்த வேலை கிடைக்கவில்லை என்றால், நான் என் குழந்தை பருவ காதலியை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள முடியாது.  ஏனென்றால் உனக்கு வேலை இருந்தால் மட்டுமே அவளை திருமணம் செய்து கொள்ள முடியும் பெண்ணின்  தந்தை தெரிவித்துள்ளதாக கூறியிருந்தார்.

அர்வா ஹெல்த் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தனது சமூக ஊடக தளமான எக்ஸ் தள பதிவில், வேட்பாளர் அடுத்த கட்ட பணியமர்த்தலுக்கு முன்னேறிவிட்டாரா என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்டார். எவ்வாறாயினும், அர்வா ஹெல்த் முழுநேர முழு-அடுக்கு பொறியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை இன்னும் ஏற்றுக்கொள்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு நெட்டீசன்களின் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஒருவர் இந்த பதிவு அதிக சிரிப்பைத் தூண்டியது. பெங்களூரைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி தனது நேர்மைக்காக மட்டுமே அவரை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று பலர் வலியுறுத்தினர். "அவரது நேர்மைக்கு அவரை வேலைக்கு அமர்த்துங்கள்" என்று கருத்துகளில் தெரிவித்துள்ளார்.

மேலும் பல நெட்டீசன்கள், "அவனுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுங்க" இன்னொருவர். "என் கேள்வி என்னவென்றால், இது வேலை செய்ததா, இந்த நபரை ஷார்ட்லிஸ்ட் செய்ய இது உங்களுக்கு கூடுதல் விளிம்பைக் கொடுத்ததா?"  பதிலளித்துள்ளார்.

Tags:    

Similar News