பெங்களூரில் பணமழை.. மேம்பாலத்திலிருந்து வீசிய நபரால் பரபரப்பு
பெங்களூரு கேஆர் மார்க்கெட் மேம்பாலத்தில் இருந்து ஒருவர் பணத்தை வீசிய சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.;
பெங்களூரு கேஆர் மார்க்கெட் மேம்பாலத்தில் இருந்து ஒருவர் பணத்தை வீசிய சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
பெங்களூரு டவுன் ஹால் அருகே உள்ளது கே.ஆர்.மார்க்கெட். இங்கு தமிழகத்திலிருந்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவை இங்கு விற்பனைக்காக வருகின்றனர். பெங்களூரு மாநகர் முழுவதும் இங்கு சில்லரை வியாபாரிகள் காய்கறி மற்றும் பழங்களை வாங்கிச் செல்வதற்காக குவிந்து வருவது வழக்கம். மேலும் பொதுமக்களும் இங்கு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
இதன் அருகே மேம்பாலம் ஒன்று டவுன் ஹாலிலிருந்து செல்லும் மைசூர் ரோடு அமைந்துள்ளது. இந்த வழியாகத்தான் தமிழக பேருந்துகள் நிற்கும் சேட்டிலைட் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
இந்த நிலையில் இன்று காலை இந்த மேம்பாலம் பகுதியில் ஏராளாமான மக்கள் குவிந்திருந்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கேஆர் மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து 10 ரூபாய் நோட்டுக்களை ஒருவர் வீசி பண மழை பொழிய வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அந்த நபர் கருப்பு நிற பிளேஸரை அணிந்து, சுவர் கடிகாரத்தை தொங்க விடுவது போல் உள்ளது. அவரது கழுத்தில் ரூபாய் நோட்டுகள் பறந்து சிதறி கிடப்பதைக் கண்ட மக்கள், அவற்றை எடுக்க முண்டியடித்ததால், சிறிது நேரம் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஆதாரங்களின்படி, முப்பது வயது இருக்கும் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் அவர் 10 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வீசியது தெரியவந்தது. அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.