மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 166 பேரை பலி கொண்ட கருப்பு நாள்

நவம்பர் 26 இன்று மும்பையில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 166 பேரை பலி கொண்ட கருப்பு நாள் ஆகும்.

Update: 2023-11-26 11:25 GMT

தீவிரவாதிகள் தாக்குதலில் தீ பிடித்து எரியும் தாஜ் ஓட்டல் (கோப்பு படம்)

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தொடர்  தாக்குதலில், 18 பாதுகாப்புப் படையினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நாள் இந்திய வரலாற்றில் கருப்பு நாளாக கருதப்படுகிறது.

தாக்குதல்கள் தெற்கு மும்பையில் எட்டு இடங்களில் நடந்தது. சத்ரபதி சிவாஜி முனையம் ,தி ஓபராய் டிரைடன்ட் ஓட்டல் , தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர், லியோபோல்ட் கஃபே, காமா மருத்துவமனை (பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை), நரிமன் ஹவுஸ் யூத சமூக கூடம் ,மெட்ரோ சினிமா, டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டிடத்தின் பின்னாலுள்ள வழிபாதை மற்றும் சேவியர் புனித கல்லூரி. மும்பை துறைமுகம பகுதி மஜகாணிலும் வில்லே பார்லேயில் ஒரு டாக்ஸியிலும் குண்டு வெடிப்புகள் நடந்தது.

இந்த தாக்குதல்கள் 2008ம் ஆண்டு புதன் கிழமையான, 26 நவம்பர் அன்று தொடங்கி நவம்பர் சனிக்கிழமை 29 வரை நீடித்தது. தாஜ் ஹோட்டல் தவிர அனைத்து தளங்களையும் மும்பை போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தங்களது பாதுகாப்புக்குள் கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

60 மணி நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலை பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அதிரடிப்படை வீரர்கள் தங்களது  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதலில் வெளி நாட்டு சுற்றுலாப்பயணிகள், போலீஸ் அதிகாரிகள், வர்த்தகர்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட ௧௬௬ பேர் தங்களது இன்னுயிரை இழந்தனர். தாக்குதலின்போது பிடிபட்ட ஒரு தீவிரவாதி மட்டும் நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் தூக்கிலிடப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News