நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10 ராக்கெட்

பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தபடி நாளை (ஆக.12) .எஸ்.எல்.வி. எஃப்-10' ராக்கெட் விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது

Update: 2021-08-11 01:03 GMT

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, ஆகியவற்றை அறிந்து கொள்ள 'ஈஓஎஸ்-03' (EOS-3) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

2,268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் 'ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10' ராக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை (ஆக. 12) அதிகாலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதையடுத்து விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை இஸ்ரோவால் விண்ணில் செலுத்த முடியவில்லை.

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், நாளை (ஆக.12) திட்டமிட்டபடி விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News