இஸ்லாமிய தலைவரின் "ஓம்-அல்லாஹ்" கருத்து: மேடையை விட்டு வெளியேறிய மதத் தலைவர்கள்

ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் தலைவர் சையது அர்ஷத் மதனியின் கருத்துக்கு மேடையில் இருந்த ஜெயின் முனி, ஆச்சார்யா லோகேஷ் முனி ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர்.;

Update: 2023-02-12 16:15 GMT

ஜமியத் உலமா-ஐ-ஹிந்தின் 34-வது பொது அமர்வில், அமைப்பின் தலைவர் சையத் அர்ஷத் மதானி சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்தியதை அடுத்து, பல மதத் தலைவர்கள் மேடையை விட்டு வெளியேறினர்.

மேடையில் இருந்த ஜெயின் முனி, ஆச்சார்யா லோகேஷ் முனி ஆகியோர் மதானியின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்து, "நாங்கள் இணக்கமாக வாழ்வதில் மட்டுமே உடன்படுகிறோம், ஆனால் ஓம், அல்லாஹ், அல்லது மனு பற்றிய அனைத்து கதைகளும் குப்பை. அவரது (மதனி) ) பேச்சு அமர்வின் சூழலை முற்றிலும் கெடுத்து விட்டது." என்று கூறினார்

மேலும் அவர் கூறுகையில், "அவர் சொன்ன கதைகள், அதை விட பெரிய கதைகளை கூட என்னால் சொல்ல முடியும். என்னுடன் விவாதத்திற்கு வருமாறு நான் அவரை (மதானி) கேட்டுக்கொள்கிறேன், அல்லது சஹரன்பூரில் நான் அவரைச் சந்திக்க வருகிறேன். முதல் சமண தீர்த்தங்கரர் ரிஷபர் என்பதையும், அவருடைய மகன்கள் பரதன் மற்றும் பாகுபலி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதனை வைத்து தான் இந்த நாட்டிற்கு 'பாரதம்' என்று பெயர் சூட்டப்பட்டது. இதை உங்களால் அழிக்க முடியாது. அவரது கருத்துகளுடன் எங்களுக்கு உடன்பாடு இல்லை" என்று கூறினார்.

முன்னதாக, ஜமியத் உலமா ஐ ஹிந்த் தலைவர் சையத் அர்ஷத் மதானி, "ஸ்ரீராமனோ, பிரம்மாவோ, சிவனோ யாருமில்லாத போது மனு யாரை வணங்கினார்?" என்று தர்ம குருக்களிடம் கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

மேலும், "சிலர் என்னிடம் 'ஓம்' வழிபாடு செய்வதாகச் சொன்னார்கள். 'ஓம்' என்பதை நாங்கள் அல்லாஹ் என்றும், பார்சி பேசுபவர்கள் 'குதா' என்றும், ஆங்கிலம் பேசுபவர்கள் 'கடவுள் என்றும் குறிப்பிடுகிறோம். இதன் பொருள் என்னவென்றால், ஓம் ஒன்று மட்டுமே உள்ளது, ஓம் அல்லது அல்லா இரண்டும் ஒன்றுதான், மனு வணங்கும் ஒரே விஷயம் இதுதான். சிவன் இல்லை, பிரம்மா இல்லை, ஆனால் ஒரே ஓம், அதுவும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கினர்" என்று மதானி கூறினார். .

அமர்வில் உரையாற்றிய மதானி மேலும் கூறுகையில், "சுமார் 1400 ஆண்டுகளாக நாட்டில் இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதரர்களைப் போல வாழ்ந்து வருகின்றனர், நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றவில்லை. பாஜக ஆட்சியில் தான் 20 கோடி முஸ்லிம்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கேள்விப்பட்டோம். அவர்களை வீட்டுக்கு அனுப்புவதாக கூறுவதன் மூலம் அவர்களை இந்துக்களாக மாற்றுகிறார்கள். இவர்களுக்கு இந்தியாவின் வரலாறு பற்றி எதுவும் தெரியாது," என்று  கூறினார்.

Tags:    

Similar News