சர்வதேச விமான இயக்கத்துக்கு நவ.30 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்தியாவிலிருந்து சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில் சர்வதேச விமான இயக்கத்துக்கான தடை நவ., 30 வரை நீட்டிக்கப்படுகிறது. ஆனாலும், அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, பூடான் மற்றும் பிரான்ஸ் உட்பட 28 நாடுகளுக்கு மட்டும் கட்டுபாடுகளுடன் கூடிய சிறப்பு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடை சரக்கு விமாங்களுக்கு பொருந்தாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.