இன்ஃப்ளூயன்ஸா தொற்று: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அட்வைஸ்

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 கிருமி தொற்று தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2023-03-11 15:15 GMT

மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன்.

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 கிருமி தொற்று வேகமாக பரவி வருகிறது. மருத்துவத்துறையில் ஆங்காங்கே அசாதாரண சூழ்நிலை தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “வைரஸ் பாதிப்பு வேகமாக பரவாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி தலைமை மருத்துவமனை வரை அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

பருவநிலை மாற்றங்களின் போது, இன்ஃப்ளூயன்ஸா தொற்று ஏற்படுவது இயல்பான நிகழ்வு தான். இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கவனித்தில் கொள்ள வேண்டும். இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 கிருமி தொற்று அதிகரிக்கும் அதே சமயத்தில், சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதையும் கவனத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News